என்னவோ தெரியல, திடீர்னு இந்த குட்டிக் கதை (குட்டிக் கதைனா நெஜமாவே குட்டிக் கதை தாங்க..கதைல மொத்தமே இரண்டு வார்த்தை தான்) ஞாபகம் வந்தது.
சுஜாதாவோட ‘கற்றதும் பெற்றதும்’-ல வந்த மாதிரி ஞாபகம்.
தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்
கதை: ஐயோ சுட்டுடாதே !
சரி..வெட்டியா இருக்கோமே நாமளும் இந்த மாதிரி ஒரு இரண்டு வார்த்தை கதை யோசிக்கலாமேனு முயற்சி செஞ்சதோட விளைவு தான் கீழ
நீங்க பாக்குற மொக்கை கதை..உன்ன யாரு இந்த விபரீத முயற்சி எல்லாம் பண்ண சொன்னதுனு நீங்க நெனக்கறது எனக்கு கேட்குது...இருந்தாலும் நாம எல்லாம் எப்போ சொன்ன பேச்சை கேட்டுருக்கோம்...
தலைப்பு: தனியே அமர்ந்திருக்கும் பெண்ணிடம் பேச விரும்புகிற கூச்ச சுபாவமுள்ளவனின் இரண்டகநிலை
கதை: பேசலாமா வேண்டாமா?!?!
எப்பூடி!!!
சரி சரி..போயி உருப்படற வேலைய பாருங்க.. :)
2 comments:
nee mokkai sangam aarambikkalam!
Good Work da
Post a Comment