Friday, May 6, 2011

பெயரிடப்படாதவை!




முத்தத்தின் ஈரங்கள்
உந்தன் மூச்சுக்காற்றிலேயே
உலர்ந்த நாட்களின் ஞாபகங்கள்..

கோடைக்காற்றிலும் உலராத
கண்ணோரம் வழிகின்ற
ஏக்கத்தின் ஈரங்கள்..

மாறாத அன்பிற்கு
மலர்வளையம் வைக்கக் காத்திருக்கும்
மவுனத்தின் தூரங்கள்..

மனதின் நாட்டத்தை மறுக்கும்
நாடகத் தோரணைகள்
நாள்தோறும் நீங்காத பாரங்கள்..
 
 
 
 
[Image courtesy: Google]

3 comments:

Chandrasekar said...

உயிரோட்டம் மிகுந்த வரிகள்,..
மடை திறந்த வெள்ளமாய் தொடரட்டும் உங்கள் பதிவு,
அதில் களித்து சிலிர்கட்டும் எங்கள் மனது...

jeevabala said...

thanks, Chandrasekar!! :)

Ramya Lakshmanan said...

மனதின் நாட்டத்தை மறுக்கும்
நாடகத் தோரணைகள்


awesome!!

Post a Comment