வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கறதுனா இது தாங்க!!
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எங்க காலேஜ்-ல ஒரு கெட்-டு-கெதர் ஏற்பாடு பண்ணிருந்தோம்.
மத்தியானம் லஞ்ச் திருவான்மியூர்-ல ஒரு ஹோட்டல்-ல சாப்பிட்டுட்டு அப்படியே பீச்சுக்கு போனோம்.
நானும் என் நண்பனும் நடந்து போய்ட்டு இருந்தோம்.
ரோட்டோரமா ஒரு சின்ன பையன் ஒரு ball -ஐ வெச்சிட்டு உக்காந்துட்டு இருந்தான்.
என்னோட நண்பன் சும்மா இல்லாம அந்த சின்ன பையனைப் பாத்து - "டேய் தம்பி, வாடா football வெளையாடலாம்"-னு கூப்பிட்டான்.
அந்த சின்ன பையன், "அண்ணா, இது volley ball-ணா" - அப்படினானே பாக்கலாம்.
என் நண்பன் மூஞ்சில அசடோட சேர்த்து எல்லாமே வழிஞ்சது.
அவன் என்னை பாத்து - "சரி சரி, அப்படியே எதுவுமே நடக்காத மாதிரி வந்துட்டே இரு. இப்படி ஒரு விஷயம் நடந்ததை யாருகிட்டயும் சொல்லிடாத."-னு சொன்னான்.
நாம தான் ரகசியத்தைக் காக்கறதுல புலியாச்சே! அதான் இப்படி!
1 comment:
hey.. yaarantha nanban?
Post a Comment