"There is so much hurt in this game of searching for a mate, of testing, trying. And you realize suddenly that you forgot it was a game, and turn away in tears."
— Sylvia Plath (The Unabridged Journals of Sylvia Plath)
— Sylvia Plath (The Unabridged Journals of Sylvia Plath)
நீ என் மேல் விழுந்தாய்
ஒளியை வழங்கினாய்
அப்பொழுது நான் நிலவாயிருந்தேன்
நீ என் மேல் விழுந்தாய்
இதழ்களை சுவைத்தாய்
அப்பொழுது நான் மலராயிருந்தேன்
நீ என் மேல் விழுந்தாய்
தொட்டு விலகி விளையாடினாய்
அப்பொழுது நான் கரையாயிருந்தேன்
நீ என் மேல் விழுந்தாய்
விழிப்பதற்குள் மறைந்தாய்
அப்பொழுது நான் கனவாயிருந்தேன்